இன்று நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் மதிமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு & 50 இளைஞர்கள் மதிமுகவில் இணைந்தனர். அதிமுகவை வீழ்த்தும் தகுதியோடு மதிமுகவே உள்ளது என தெரிவித்தார் வைகோ!
பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மதிமுக 21ல் அறப்போராட்டம்!
கட்சியை விட்டு விலகிச்சென்ற நிர்வாகிகளின் இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை உயர்நிலைக் குழுக் கூட்ட ஆலோசனைக்குப் பின் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுகவின் கட்சி நிர்வாகிகள் மற்றும் 3 மாவட்டச் செயலாளர்கள் திமுகவின் பணம் கொடுத்து ஆள் இழுப்பு முயற்சியில் சிக்கி கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு வைகோ அழைப்பு விடுத்திருந்தார். இன்று அவைத்தலைவர் திருப்பூர் துரைச்சாமி அவர்களின் தலைமையின் கீழ் நடந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விவரித்தார்.
கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை அறிவித்தார்;
மாநில மகளிர் அணிச் செயலாளர் – டாக்டர் ரொஹையா
சேலம் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அதன் செயலாளர்களாக
கிழக்கு – வ.கோபால்ராசு
மேற்கு – சங்ககிரி மகேந்திரன்
மாநகர் மாவட்டம் – வழக்கறிஞர் ஆனந்தராஜ்
விழிப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் – உளுந்தூர்பேட்டை பேரூராட்சி தலைவர் க.ஜெய்சங்கர்
காஞ்சி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் செயலாளர்களாக
கிழக்கு – ஆர்.இ.பார்த்திபன்
மேற்கு – தனசேகரன்
மதுரை புறநகர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் செயலாளர்களாக
தெற்கு – கதிரேசன்
வடக்கு – எம்.மார்நாடு
ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துதலையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
செப்.22 கலிங்கப்பட்டியில் சகோதரர் சந்துரு இல்லத் திறப்புவிழாவில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். அந்த நிகழ்வைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார்.
மதிமுக மாவட்ட செயலாளர்களிடம் ஒன்றரை மாதத்திற்கு முன்பே ஸ்டாலின் பேசி வந்தார். கூட்டணி இல்லை என்றால் பிரிக்க திட்டமிட்டார் ஸ்டாலின். இப்போது கூட்டணி இல்லை என்று அறிவிப்பு வந்தவுடன் அதைதான் நிறைவேற்றி உள்ளனர். அதற்கு பதவியில் இருந்த சிலர் விலை போய்விட்டனர் என்றும் தெரிவித்தார். இப்பவே இந்த வேலை செய்கிறார்களே, இவர்களுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவர்களையும் இழுக்க முயற்சிக்கும் திமுக. கட்சிக்கு ஆபத்து என்றால் தொண்டர்கள் வருவார்கள். அப்படித்தான் இன்றும் வந்தார்கள். ஆனால் அவர்கள் பட்டம் பதவி கேட்டு வரமாட்டார்கள். அவர்கள்தான் இந்த கட்சியை காப்பாற்றுவார்கள் என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாணவர்கள் 50 பேர் கழகத்தில் இணைந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஒமன்
No comments:
Post a Comment