மறுமலர்ச்சி திமு கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர் இரா.சங்கர் , துணை செயலாளர் து.முருகன் ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என கடந்த 21 ஆம் தேதி தலைமை கழகம் செய்தி வெளியிட்டிருந்தது.
பின்னர் பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர் இரா.சங்கர் , துணை செயலாளர் து.முருகன் ஆகிய இருவரும், தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து உரிய விளக்கம் அளித்துள்ளதால், அவர்களது விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்டிருந்த ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
எனவே இரா.சங்கர், து.முருகன் ஆகிய இருவரும், தாங்கள் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள் என 27-09-2015 நேற்றைய தலைமை கழக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கழக உடன்பிறப்புகள், இவர்களுடன் இணைந்து பணியாற்ற ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment