திருப்பூர் பல்லடம் 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு பந்தல் மிக பிரமாண்டமாக லட்சகணக்கான மக்கள் அமரும்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் மின் விசிறி வசதிகளுடன் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயில் அரண்மனையை ஒத்த தோற்றம் உடையதாக பந்தல் சிவா வடிவமைத்துள்ளார்.
இதில் குழந்தைகளுக்கு ஈழத்தில் நடந்த கொடுமைகளை பற்றிய புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கே இந்த வரலாற்றுக்க் காட்சிகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து காண்பித்து விளக்கினார்கள்.
திருப்பூரிலிருந்து பல்லடம் வரை மதிமுக கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலைகள் முழுதும் கழக கொடிகள் பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்கிறது. வண்ணமயமான பிளக்ஸ் பேனர் போர்டுகள் மாநாட்டுக்கு வருபவர்களை அண்ணாவின் வாசகங்களால் வரவேற்றுக்கொண்டிருக்கிறது.
மதிமுக இணையதள அணி நண்பர்கள் அயராது பந்தலில் பணியில் அமர்ந்துள்ளனர். முக்கிய அனைத்து நிர்வாகிகளும் பணிகளை பார்வையிட்டுக்கொண்டேயிருக்கின்றனர். நாளை காலை தமிழகமே அதிரும்படி மாநாடு நடக்கிறது. மதிமுக மகுடம் சூட போகிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment