Thursday, September 17, 2015

மதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 137 ஆவது பிறந்தநாள் விழா!

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 137ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று தனது சொந்தக் கிராமமான கலிங்கப்பட்டியில் தந்தை பெரியார் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

தலைமைக் கழகம் தாயகத்தில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் அவர்களின் திருஉருவச் சிலைக்கு இன்று காலை 10 மணிக்கு சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதில், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் அம்பிகாபதி, செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன் மற்றும் மல்லிகா தயாளன், டி.ஜெ.தங்கவேலு, மு.தமிழரசன், ஏ.எஸ்.ராஜீ, வி.அசோக்குமார், சுரேஷ் அப்பன்துரை, சித்திரைவேல், சகாயஅரசி, பழனி, ஆரி, கமல்ராஜன், அறிவழகன், யுவராஜ், ராஜசேகர், செல்லப்பாண்டி, அம்மாபேட்டை கருணாகரன், சிவனேசன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment