மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை சோதனை சூழ்ந்துள்ள வேளையில், இன்று நடந்த மதிமுக உயர் நிலை குழு கூட்டத்தில், கழகத்தைக் காக்க தாயகம் வந்த தீரர்களில் ஒருவரான விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான நெடுஞ்செழியன் அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, இராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது உயிர் நீத்தார். அவரது உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.
உடன் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஏ.கே.மணி, மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் அம்பிகாபதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன், சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார், மறுமலர்ச்சி ஆபத்து உதவிகள் அணி மாநிலச் செயலாளர் பூவை கந்தன், பகுதிப் பொறுப்பாளர்கள் டி.ஜெ.தங்கவேலு, இராம.அழகேசன், மத்தியசென்னை மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் மு.தமிழரசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக இணையதள அணி - ஒமன்
No comments:
Post a Comment