107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மதிமுக மாநாடு திருப்பூர் பல்லடத்தில் நாளை மறு நாள் செப்டம்பர் 15 ல் நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் தமிழரான பேராசிரியர் ராமசாமி பங்கேற்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை வந்தார். மதிமுக பொதுசெயலாளர் வைகோ வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் மாலை வைகோ மற்றும் ராமசாமி ஆகியோர் சென்னையிலிருந்து கோவை வந்தனர்.
கோவை வந்த பேராசிரியர் ராமசாமி அவர்களுக்கு மேள தாளங்களுடன் தமிழர் கலாச்சாரத்தோடு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஏற்ப்பாட்டை கோவை மாவட்ட மதிமுகவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment