வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் அனேகம்பேர் மதிமுகவின் கொள்கை பிடிப்புள்ள மறுமலர்ச்சி வேங்கைகளாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் அயல்நாடுகளில் நேரடியாக களத்தில் இல்லாத காரணத்தால் இணையதள அணியாக செயல்படுகின்றனர்.
இதில் ஓமன் (மஸ்கட்) - லும் மதிமுக மறுமலர்ச்சி வேங்கைகள் பலர் இணைந்து ஓமன் மதிமுக இணையதள அணி என்னும் போர்வையில் இயங்கி வருகின்றனர். இவர்கள் தமிழினத்தின் காவலாளி, மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களின் இணையதள பிரச்சார பீரங்கிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
நாளை நடக்கிற மாநாட்டிற்காக ஏற்கனவே மதிமுகவின் அதிகாரபூர்வ வார ஏடான "சங்கொலியில்" விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வார ஏடானது மாநாட்டு பந்தல்களில் நாளை காலை முதல் தலைவர் வைகோ, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் தவழும்போது ஓமன் மதிமுக இணையதள அணியினரின் கவிதைகள் தாங்கிய விளம்பரம் அவர்களின் கண்களை குளிர்விக்கும். அகிலமே அறியும் படி இணையத்தில் அதன் பிரதிகளும் காணப்படும்.
அதே போல அடுத்த விளம்பரமாக மாநாட்டிற்கான பிரமாண்டமான பிளக்ஸ் போர்டு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக பல்லடத்தில் வைக்கப்பட்டிருக்கும். தலைவர் வைகோ அவர்கள் வரும் வழியில், தலைவரின் கண்கள் உற்று நோக்கும்படியாக அந்த பேனர் முகாமிட்டிருக்கும்.
நண்பர்களே! இணையதள அணிக்கும் அங்கிகாரம் கிடக்கும். கழகத்தின் மற்ற அணிகளை போல இணையதள அணியும் கழகத்தின் ஒரு அங்கமாக செயல்பட தலைவர் மாநாட்டில்அறிவிப்பார் என நம்பிக்கையோடிருப்போம்.
"கடமையாற்றுவோம். அரியணையேறுவோம்"
வாரீர்! படை நடுங்க வாரீர் பல்லடத்திற்கு!
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment