நாளை நடக்கிற மாநாட்டு திடலில், இடம்பெற்றிருக்கிற ஈழத்தில் இனப்படுகொலை புகைப்பட கண்காட்சியில் இன்று முதல் பொதுமக்கள் அர்வமாக வந்து கண்டுகழித்தனர்.
கழக ஆய்வு மைய செயலாளர் அண்ணன் திரு.செந்திலதிபன் அவர்கள் தன் துணைவியாருடன் கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டார்கள்.,
தலைவர் தற்போது மாநாட்டுக்கு வருகை தந்தார். பின்னர் அவர் மேற்பார்வையில், மதிமுக மாநாட்டு ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் விருவிருப்பாக நடந்து வருகிறது.
நாளைய மாநாட்டிற்கு இன்றைக்கே மதிமுகவினரின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் மாநாட்டு திடலில் சங்கமம் ஆகிவிட்டனர்.
மாநாட்டு அரங்கத்திற்க்கு வருகை தந்த மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களை தலைவர் வைகோ அவர்கள் வரவேற்று கண்காட்சி அரங்கை பார்வையிட செய்தபோது...
இனப்படுகொலை கண்காட்சியை தலைவர் வைகோ அவர்கள் பினாங்கு துணை முதல்வருடன் பார்வையிட்டு விளக்கினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment