2015 ஏப்ரல் 7 ஆம் தேதியன்று, ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல் படையினர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளர்களான இருபது தமிழர்களை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று, சேசாசலம் வனப்பகுதிக்குள் உடல்களைப் போட்டுவிட்டு, அவர்கள் செம்மரங்களைக் கடத்தியதாகவும், காவல்துறையினரைத் தாக்கியதாகவும் அக்கிரமமான அபாண்டப் பொய்களைப் பரப்பினர்.
தமிழக அரசு, மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையைக் கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று செப்டெம்பர் 8 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், மறுமலர்ச்சி தி.மு.கழக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில், மறுமலர்ச்சி தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த உண்ணாநிலை அறப்போரில் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment