அரியலூரில் பேருந்து நிலையம் அருகே இன்று இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை குழு முன்பு இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மதிமுக சார்பில் நடத்தப்பட்டது. பின்னர் பேரணியாக கன்டன குரலெழுப்பி சென்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் அரிமா ராசேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கழக தொண்டர்கள் மிகவும் உற்சாகமாக கலந்துகொண்டு கோசங்களை எழுப்பியது தமிழின எழுச்சியாக அமைந்தது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment