ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சிங்கள அரசின் உள்நாட்டு விசாரணையை கண்டிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது. இதில் கழகத் துணைப் பொது செயலாளர் அண்ணன் மல்லை சத்யா தலைமை தாங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தலைவர் வைகோ அவர்கள் எதை எதை அறிக்கைகளாக வெளியிடுகிறாரோ, அதையெல்லாம் தமிழக அரசு தீர்மானங்களாக நிறைவேற்றி வருகிறது. பொது வாக்கெடுப்பு ஒன்றே ஒரு வழி. சிங்கள ராணுவத்தை வெளியேற்று. இலங்கை படுகொலைக்கு நீதி வேண்டும். தமிழீழம் மலரட்டும் போன்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓவியர் சந்தானம் அவர்கள், எத்தனை பேர் திமுகவுக்கு சென்றாலென்ன, அதை கண்டு தளறாமல் மக்கள் தலைவர் வைகோ பின்னால் போராடுபவர் நீங்கள், உங்களை வணங்குகிறேன் என கழக தொண்டர்களை பார்த்து சொல்லி உதிரத்தில் உணர்ச்சியூட்டினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட செயலாளர்கள் திரு.பார்த்திபன் மற்றும் திரு.ஜெகன் தனசேகரன் அவர்களை தோழர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
கழக கண்மணிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






























No comments:
Post a Comment