பேரறிஞர்
அண்ணா 107 ஆவது பிறந்தநாள் விழா!
திராவிட இயக்க நூற்றாண்டு விழா
மாநாடு, 2015 செப்டம்பர் 15 ல், திருப்பூர் மாவட்டம்
பல்லடத்தில் மிரமாண்டமாக நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
வருமாறு!
.
தீர்மானம்:1
.
1928 இல்
நீதிக் கட்சி ஆதரவுடன் ஆட்சிப்
பொறுப்பு ஏற்ற சுப்புராயன் அமைச்சரவை,
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற இட ஒதுக்கீடு
ஆணையைப் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சமூக
நீதிக் கொள்கை வளர்ச்சி பெற்று,
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு
69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எதிராக, உச்ச
நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, மொத்த இட
ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு
மேல் போகக் கூடாது என்று
உச்சநீதிமன்றம் அவ்வப்போது உத்தரவிட்டு வலியுறுத்துகிறது.
.
இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கு, மாண்பமை நீதிபதிகள் தீபக்
மிஸ்ரா, பிரபுல்லா சி.பந்த் ஆகியோர்
அடங்கிய அமர்வு முன்பு ஆகஸ்டு
17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நடப்புக் கல்வி ஆண்டில் மருத்துவக்
கல்லூரிகளில் இடம் கேட்டு மனு
செய்த 8 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில்
ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,
இட ஒதுக்கீடையே ரத்து செய்யக் கோரும்
முதன்மை மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
.
மண்டல்
குழு பரிந்துரைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில், 16.11.1992 இல் உச்ச நீதிமன்றம்
அளித்தத் தீர்ப்பில், ‘மொத்த இட ஒதுக்கீட்டின்
அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது’ என்று
ஆணை பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் நடைமுறையில்
இருந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறைக்குச்
சிக்கல் எழுந்தது. அப்போதைய அ.தி.மு.க. அரசு, 1993 இல்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதலின்படி
ஒரு சட்ட முன்வடிவைத் தமிழகச்
சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
.
31.12.1993 இல்
தமிழகச் சட்டமன்றத்தில் இச்சட்ட முன்வடிவு ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. பின்னர் இச்சட்டம் அரசியல்
அமைப்புச் சட்டம் 31(சி) பிரிவின் கீழ்
பாதுகாப்பு பெறும் பொருட்டு, 1994 இல்
அரசியல் சட்டத்தின் 76 ஆவது திருத்தம் மூலம்
9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் 69 விழுக்காடு
இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும்
வகையில் தமிழக அரசின் சட்டம்,
உச்சநீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாக
சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. ஆனால்,
அதற்குப் பிறகும் உச்ச நீதிமன்றம்
மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு
50 விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது என்று
உத்தரவிடுவதால், இட ஒதுக்கீட்டு அளவை
மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும்
வகையில் உரிய அரசியல் சட்டத்
திருத்தத்தைக் கொண்டு வந்து சமூக
நீதி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசை
இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
லோக் ஆயுக்தா
.
தீர்மானம்:
2
.
இந்தியாவில்
புரையோடிப் போயிருக்கின்ற இமாலய ஊழல்களால் ஜனநாயக
நெறிமுறைகளின் மீது மக்கள் நம்பிக்கை
இழக்கின்ற நிலைமை ஏற்பட்டு வருகிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மக்கள் நலனுக்காகத் தங்கள்
வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக சீலர்களாக மதித்துப்
போற்றப்பட்ட காலம் மாறி, இன்று பதவிக்கு வருகின்றவர்கள்
ஊழல் குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு லோக்பால்
சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இச்சட்டத்தின் வழிகாட்டு முறைகளைப் பின்பற்றிச் சில மாநிலங்கள் ‘லோக்
ஆயுக்தா’ சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளன. ஊழலற்ற
ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்திட, தமிழக
அரசு ‘லோக்
ஆயுக்தா’ சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்
என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
3
.
தமிழ்நாட்டில்
முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற
கோரிக்கை வலுவடைந்து இருக்கிறது. மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடி வந்த காந்தியவாதி
சசிபெருமாள் உயிர்த் தியாகம் தமிழக
மக்களிடையே குறிப்பாகத் தாய்க்குலத்தவர் மற்றும் இளைஞர்கள் மாணவர்களிடம்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதன் விளைவாக டாஸ்மாக்
மதுக்கடைகளை இழுத்து மூட வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக
வெடித்தது. கலிங்கப்பட்டி கிராமத்தில் கழகப் பொதுச்செயலாளரின் தாயார்
மாரியம்மாள் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு நடத்திய
அறப்போராட்டமும், பொதுச்செயலாளர் வைகோ நடத்திய அறப்போராட்டமும்
தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான எழுச்சிமிக்க போராட்டத்திற்கு
ஊக்கம் அளித்தது.
.
தமிழகத்தின்
பழமை வாய்ந்த பண்பாட்டுப் பெருமைகள்
சீரழிந்து வருவதும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து
வருவதும், சின்னஞ் சிறிய பிஞ்சுகள்
கூடக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி எதிர்காலம் பாழாவதும்
மிகுந்த கவலை தருகிறது. தேசியக்
குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட
அறிக்கையின்படி 2014 இல் நடைபெற்ற சாலை
விபத்துகளில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில்
இருக்கிறது. அதற்குக் காரணம் குடிப்பழக்கம்தான் என்பதும்
அதிர்ச்சி தருகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் உடல் நலன் கெட்டு,
வாழ்நாள் நோயாளிகளாக மாறி வரும் அவலம்
தொடர் நிகழ்வுகளாகி விட்டன. எனவே தமிழக
அரசு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திடக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க. மக்களைத்
திரட்டி போராட்டம் நடத்தும் என்று இந்த மாநாடு
அறிவிக்கிறது.
.
தீர்மானம்:
4
.
நரேந்திர
மோடி தலைமையிலான பா.ஜ.க.
அரசு பொறுப்பு ஏற்றவுடன், பிரதமர் அறிவித்த ‘இந்தியாவில்
தயாரிப்போம்’(ஆயமந in ஐனேயை) திட்டத்தைச்
செயல்படுத்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச்
சட்டத்தைக் கொண்டு வந்தது. விவசாயிகளிடம்
இருந்து நிலங்களைப் பறித்துப் பெரு முதலாளித்துவ நிறுவனங்களிடம்
தாரை வார்த்துக் கொடுக்கும் மோடி அரசின் நிலப்பறிப்புச்
சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள்
கொந்தளித்துப் போராட்டத்தில் இறங்கினர். மூன்று முறை அவசரச்
சட்டமாகக் கொண்டு வரப்பட்டும் நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற முடியாமல் போனது. மக்கள் எதிர்ப்பால்
பின்வாங்கியுள்ள மோடி அரசு, இச்சட்டத்தைத்
தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறப்படும் வேளாண்மைத்
தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்கும்
கடமை மத்திய -மாநில அரசுகளுக்கு
இருப்பதை உணர்ந்து, நிலம் கையப்படுத்துதல் சட்டத்தை
மத்திய அரசு நிரந்தரமாக்க கைவிட
வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
5
.
தேசியக்
குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள
ஆய்வு அறிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும்
நாடு முழுவதும் 5650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர்களில்
தமிழ்நாட்டில் மட்டும் 68 விவசாயிகள் மற்றும் 827 விவசாயத் தொழிலாளர்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்
அதிர்ச்சி தருகிறது.
.
விவசாய
விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலையின்மை, விவசாயிகள் வாங்கும் இடுபொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு,
எளிதில் கடன் பெற முடியாத
காரணத்தால் அதிக வட்டிக்குக் கடன்
பெற்றுத் திருப்பிச் செலுத்திட இயலாமை, இயற்கைச் சீற்றங்களால்
ஏற்படும் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால்
விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கைகளில்,
இதுவரை 7 விழுக்காடு வட்டியில் அளிக்கப்பட்டு வந்த வேளாண் கடனை
இனி 11 விழுக்காடு வட்டியில் வழங்க வேண்டும் என்று
அறிவுறுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது ஆகும்.
விவசாயத் தொழிலில் உள்ள நெருக்கடிகளைக் கருத்தில்
கொண்டு, வேளாண் கடனுக்கான வட்டி
விகிதத்தை 4 விழுக்காடு என்று நிர்ணயம் செய்ய
வேண்டும் என்று இந்த மாநாடு
மத்திய அரசை வற்புறுத்துகிறது.
.
தீர்மானம்:
6
.
விவசாய
விளைபொருட்களான நெல், கரும்பு, மஞ்சள்,
மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு தேசிய
வேளாண் ஆணையப் பரிந்துரையின்படி உற்பத்திச்
செலவை விடக் கூடுதலாக 50 விழுக்காடு
விலையை உயர்த்தி வழங்க வேண்டும்;
.
கூட்டுறவு
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க
வேண்டிய ரூ.1500 கோடி நிலுவைத்
தொகையை வழங்குவதற்குத் தமிழக அரசு தலையிட்டு
நடவடிக்கை எடுக்க வேண்டும்;
.
பயிர்க்
காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் செய்து, பாதிக்கப்படும்
தனி நபர் விவசாயிகளுக்கும் இழப்பீடு
கிடைக்க வழி வகை செய்ய
வேண்டும்;
.
சர்க்கரை,
எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்
கொள்கையினை விவசாயிகளுக்கு நீண்ட காலம் பயன்
அளிக்கும் வகையில் மாற்றி அமைக்க
வேண்டும்;
.
நீர்ப்பாசனத்
திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு
செய்வதுடன், நீர் மேலாண்மைத் திட்டங்களைச்
செம்மையாகச் செயல்படுத்திட சொட்டு நீர்ப் பாசனத்திற்கு
ஆகும் அதிகச் செலவினங்களைக் கருத்தில்
கொண்டு, 50 விழுக்காடு அளவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்;
.
தோட்டக்கலை
சாகுபடியை ஊக்கப்படுத்த சந்தை வாய்ப்பு, குளிரூட்டும்
மையங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத்
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
7
.
காவிரி
ஆற்றில் தண்ணீர் திறந்து விட
கர்நாடக மாநில அரசு மறுத்து
வருவதால், காவிரி பாசனப் பகுதிகளில்
சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பயிர்கள் கருகும் நிலைமை ஏற்பட்டு
விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறுவை
சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதம் திறக்க
வேண்டிய மேட்டூர் அணை நடப்பு ஆண்டு
நீர் மட்டம் குறைவாக இருந்ததால்
ஆகஸ்டு 9 ஆம் தேதிதான் திறக்கப்பட்டது.
.
காவிரியில்
ஆகஸ்டு மாதம் வரை திறந்து
விட வேண்டிய நீரில் 27.6 டி.எம்.சி. குறைந்து
விட்டதால், அந்த அளவுக்குக் காவிரியில்
நீரைத் திறந்து விட வேண்டும்
என்று தமிழக அரசு கோரியதை
கர்நாடக அரசு ஏற்க மறுத்து
விட்டது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக
மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல்,
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு தொடருகிறது. இதற்கு
முடிவு கட்ட காவிரி நடுவர்
மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை
அமைக்க மத்திய அரசு உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டு; காவிரியின்
குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு
அணைகள் கட்டும் கர்நாடக அரசின்
வஞ்சகத் திட்டத்திற்கு மத்தியஅரசு துணை போகக் கூடாது
என்று இந்த மாநாடு வற்புறுத்துகிறது.
.
தீர்மானம்:
8
.
தமிழ்நாட்டில்
உள்ள எந்த ஆறுகளிலும் கழிவுகள்
கலப்பது இல்லை என்று தமிழகச்
சட்டமன்றத்தில் சுற்றுச் சூழல் அமைச்சர் கூறியிருப்பதற்கு
இந்த மாநாடு கடும் கண்டனம்
தெரிவிக்கின்றது. கொங்கு மண்டலத்தில் பவானி
ஆற்றிலும், காவிரி, நொய்யல் ஆறுகளிலும்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றிலும் ஆலைக் கழிவுகள் கலந்து
நதி நீர் பயன்படுத்த முடியாத
அளவுக்கு நஞ்சாகி வருகின்றது. விவசாயத்திற்கும்,
மக்கள் குடிநீருக்கும் பயன்பட்டு வந்த ஆற்று நீர்
பாழாகி வருவதைத் தமிழக அரசு மூடி
மறைக்க வேண்டிய தேவை இல்லை.
ஆலைக் கழிவுகளும், நகரக் கழிவுகளும் நதிகளில்
கலப்பதைக் கண்காணித்து, தமிழக அரசு சுற்றுச்
சூழல் துறையின் மூலம் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
9
.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் முதல்
முறையாக சென்னையில் நடத்தியதாகத் தமிழக அரசு விளம்பரம்
செய்கிறது. இந்த மாநாட்டின் மூலம்
ரூபாய் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவுக்கு முதலீடு
கிடைப்பது உறுதியானதாக முதலமைச்சர்
கூறி இருக்கின்றார்.
.
கடந்த மூன்று ஆண்டுக் காலத்தில்
அந்நிய நேரடி முதலீடுகள் 31,706 கோடி
ரூபாய்க்கு வந்ததாகவும், இதற்காக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியது.
ஆனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம்
என்பது மைனஸ் 1.3 விழுக்காடு என்று மத்தியத் திட்டக்குழு
உறுப்பினர் அபஜித்சென் கடந்த ஆண்டு சுட்டிக்
காட்டினார்.
.
இந்நிலையில்,
தற்போது கடந்த 20 ஆண்டுகளில் கிடைத்த முதலீடுகளைப் போல
இரு மடங்கு வந்துள்ளதாகவும், 98 புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். மின் கட்டமைப்பை வலுப்படுத்தாததால்
ஏற்பட்ட கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு, அரசு நிர்வாகத்தில் புரையோடிக்
கிடக்கின்ற ஊழல்கள் மற்றும் தமிழக
முதல்வரைச் சந்தித்து தொழில்துறையினர் நேரடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பு இல்லாத சூழல் போன்ற
காரணங்களால் தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் அண்டை
மாநிலங்களுக்குப் போய்விட்டன என்பதுதான் உண்மை நிலை ஆகும்.
.
கடந்த நான்கு ஆண்டுக் காலமாக
தமிழ்நாட்டில் உள்ள சிறு குறுந்தொழில்கள்
சந்தித்து வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு
காண அ.தி.மு.க. அரசு முயற்சிக்கவில்லை.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பெரிய
நிறுவனங்கள் மற்றும் வெளி மாநிலங்களில்
இருந்து பெறப்படும் கொள்முதல் ஆணைகளை நம்பி இவை
செயல்படுகின்றன. ஆனால், மின் தடை,
நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இவர்கள்
எதிர்கொண்டுள்ளனர். குறுந்தொழில் பேட்டைகள், மூலப் பொருள் வங்கி
அமைத்தல், கோடிக் கணக்கில் நிலுவையில்
உள்ள ஜெனரேட்டர் மானிய நிதியை வழங்குதல்,
சொத்துப் பிணையம் இன்றிக் கடன்
உதவி வழங்குதல், வங்கிக் கடனைத் திருப்பி
செலுத்தும் கால அவகாசத்தை நீட்டுதல்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்
தர, குறுந்தொழில் அமைப்புகள் தமிழக அரசை தொடர்ந்து
வலியுறுத்தி வந்தன.
.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்
மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால்,
தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். கட்டண உயர்வைத் திரும்பப்
பெற வலியுறுத்தி கோவையில் ‘டேக்ட்’, ‘காட்மா’, ‘கோப்மா’, சிறு குறு பவுண்டரிகள்
சங்கம் (காஸ்மாபேன்), எலக்ட்ரோ பிளேட்டர்ஸ் சங்கம்(கொடியா) பிளாஸ்டிக்
பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், சிட்கோ சிறு
மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் உள்ளிட்ட பத்துக்கும்
மேற்பட்ட குறுந்தொழில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தின.
அவர்களுக்கு ஆதரவாக ‘கொடிசியா’, இந்திய
தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட
பல்வேறு தொழில் அமைப்பினரும் செயல்பட்டனர்.
.
தமிழக அரசின் பாராமுகம், அலட்சியத்தின்
காரணமாகத் சிறு குறு தொழில்
முனைவோர் தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிடும்
நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.
தொழில் நெருக்கடியால் இங்கு வந்த கொள்முதல்
ஆணைகள் கோவையைத் தவிர்த்து கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப்
மாநிலங்களுக்குச் சென்று விட்டன.
.
எனவே, தமிழக அரசு பெருந்தொழில்
முதலீட்டாளர்களிடம் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 30 விழுக்காடு கொள்முதல் ஆணைகளை, சிறு குறு
தொழிலுக்கு ஒதுக்கிட வழிவகை காண வேண்டும்
என்றும், சிறு குறு தொழில்
முனைவோரின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவற்றைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று
இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
10
.
இலங்கைக்
கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது
தாக்குதல் நடத்துவதும், மீனவர்களின் படகுகள் மீன்பிடி வலைகள்
உள்ளிட்ட உடைமைகளைப் பறித்துச் செல்வதும் தொடர் அட்டூழியங்களாக நீடிக்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் 600க்கும்
மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக்
கொன்றுள்ளனர். இந்திய அரசு, தமிழக
மீனவர்கள் மீது அக்கறை இன்றி,
இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் போக்கு பா.ஜ.க. அரசிலும் தொடருகிறது.
.
இலங்கைக்
கடற்படை தமிழக மீனவர்கள் மீது
தாக்குதல் நடத்துவதையும், துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், மீன்பிடிக்
கருவிகள் மற்றும் படகுகளைப் பறிமுதல்
செய்வதையும் தடுக்க வேண்டும் என்று
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு
வழக்கு தொடரப்பட்டது.
.
இந்த வழக்கு விசாரணையின்போது இந்தியக்
கடலோரக் காவல்படையின் துணைத் தலைமை இயக்குநர்
சார்பில் ஏப்ரல் 27 அன்று தக்கல் செய்யப்பட்ட
பதில் மனுவில்,
.
“இந்தியக்
கடல் எல்லையில் மீன் வளம் குறைந்ததால்,
நமது மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் மீன்
பிடிக்கச் செல்கின்றனர்; இலங்கையில் போர் முடிவுக்கு வந்த
பிறகு, நமது மீனவர்கள் தங்கம்,
போதைப் பொருட்கள் கடத்துகின்றனர், தடை செய்யப்பட்ட மீன்
பிடி வலைகளை பயன்படுத்துகின்றனர்; இலங்கை மீனவர்களின்
மீன்பிடிக் கருவிகளைத் தமிழக மீனவர்கள் சேதப்படுத்துகின்றனர்;
இந்திய மீனவர்களின் சட்ட விரோதச் செயல்களால்தான்
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை
கைது செய்து சிறையில் அடைத்துள்ளது;
சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி
போதைப் பொருள் கடத்தல் போன்ற
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக
2014 ஜனவரி முதல் 2015 ஏப்ரல் வரை இந்திய
மீனவர்களின் 185 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,
937 மீனவர்கள் மீது வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது; இந்திய கடல் எல்லையில்
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கியதாக இதுவரை
கடலோரக் காவல் படைக்கு எவ்விதப்
புகாரும் வரவில்லை. இந்திய எல்லைக்குள் இலங்கைக்
கடற்படையினர் மீனவர்களைத் தாக்குகின்றனர் என்பது தவறானது”
.
என்று மத்திய அரசு அப்பட்டமாக
தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் வகையில் கூறியுள்ள கருத்துகள்
வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால்
சுட்டுக் கொல்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல்
விடுத்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்
கருத்தை மத்திய அரசு கண்டிக்கவில்லை.
இந்நிலையில் ஆகஸ்டு 31 ஆம் தேதி கச்சத்
தீவு மற்றும் நெடுந்தீவு, கட்டைக்
காடு கடற் பரப்புகளில் மீன்
பிடித்துக் கொண்டு இருந்த தமிழக
மீனவர்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினர்
கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களிடம்
பறிமுதல் செய்யப்படும் படகுகளை விடுவிக்க மாட்டோம்’
என்று இலங்கைக் கடற்தொழில் வளர்ச்சி அமைச்சர் மகிந்த அமரவீர கூறி
உள்ளதற்கு மோடி அரசின் நடவடிக்கைகளே
காரணம். தமிழக மீனவர்களின் பாரம்பரிய
மீன்பிடி உரிமையை நிலைநாட்ட இந்திய
அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை
பெற்றுக் கொண்டு கச்சத் தீவை
மீட்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
11
.
மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பு
ஏற்ற நாள் முதல் இந்தி
மொழித் திணிப்பை ஒரு கொள்கையாகவே செயல்படுத்தி
வருகிறது. இந்துத்துவத்தின் அடையாளமாக சமஸ்கிருத மொழியை வலிந்து பரப்புவதற்குத்
திட்டங்களைச் செயல்படுத்துவதும், இந்தி மொழிக்கு மட்டும்
உயரிய சிறப்பை வழங்கிட முயற்சிப்பதும்
இந்தியாவின் பன்முகத்தன்மைக்குக் கேடு விளைவிக்கும் என்பதை
பா.ஜ.க. அரசு
உணர வேண்டும்.
.
ஐ.நா. மன்றத்தின் அலுவல்
மொழியாக இந்தி மொழியை இடம்
பெறச் செய்வதற்கான முயற்சிகளில் பா.ஜ.க.
அரசு இறங்கி இருப்பது கண்டனத்துக்கு
உரியது. இதன் மூலம் இந்திதான்
இந்தியாவின் அடையாளம் என்பதைப் பன்னாட்டு அவையில் நிலைநிறுத்தும் முயற்சியில்
பா.ஜ.க. அரசு
ஈடுபட்டுள்ளது. ஐ.நா. மன்றத்தின்
அலுவல் மொழியாக ஆகிடும் தகுதி,
தொன்மையும் சிறப்பும் கொண்ட உயர்தனிச் செம்மொழியான
தமிழ் மொழிக்குத்தான் இருக்கின்றது. இந்திய அரசியல் சட்டத்தின்
8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம
வாய்ப்பு, சம உரிமை வழங்க
வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் ஒருமைப்பாடு, வினாக்குறியாகி விடும் என்று மாநாடு
எச்சரிக்கிறது.
.
தீர்மானம்:12
.
இந்தியாவில்
மரண தண்டனை தொடர்பாக ஆய்வு
செய்திட உச்ச நீதிமன்றம் நியமித்த
நீதிபதி ஏ.பி.ஷா
தலைமையிலான சட்ட ஆணையம், பயங்கரவாதம்
மற்றும் தேசத்துரோகம் அல்லாத பிற குற்றங்களுக்கு
மரண தண்டனை கூடாது என்று
பரிந்துரைத்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஐ.நா.
மன்றத்தின் 195 உறுப்பு நாடுகளில், 136 நாடுகள்
மரண தண்டனையை ஒழித்துள்ளன. ஆனால், இந்தியா உள்ளிட்ட
59 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில்
உள்ளது.
.
“கொலைக்
குற்றங்களைச் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதை விடுத்து
வாழ்நாள் முழுவதும் சிறையில்அடைக்கும் தண்டனையை வழங்கலாம். தூக்கு தண்டனை குற்றங்களை
குறைக்காது” என்று சட்ட ஆணையம்
வழங்கி உள்ள பரிந்துரையை ஏற்று,
மத்திய அரசு மரண தண்டனையை
ரத்து செல்வதற்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற
வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
மரண தண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத்
தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட
நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமியின் மரண
தண்டனை நிறைவேற்றுவதை முதன்முதலாகத் தடுத்து நிறுத்திய பெருமை
தலைவர் வைகோ அவர்களையே சாரும்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்
தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முரகன் ஆகியோரது கருணை
மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், செப்டம்பர் 7, 2011 இல் தூக்குத் தண்டனையை
நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞர் திரு. ராம் ஜெத்மலானி
அவர்களை அழைத்து வந்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் வைகோ அவர்கள் வாதாடச்
செய்தார்.
.
ஆகஸ்டு
31, 2011 இல் சென்னை உயர்நீதிமன்றம், மூன்று
பேரின் மரண தண்டனையை நிறைவேற்றத்
தடை ஆணை பிறப்பித்தது. அதன்
பின்னர் உச்சநீதிமன்றத்திலும் ராம் ஜெத்மலானி அவர்கள்
மூலம் வாதாடச் செய்து, மூவரின்
தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றச்
செய்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ
அவர்கள் காலத்தால் செய்த பணி வரலாற்றில்
கல்வெட்டாய்ப் பதிந்து இருக்கின்றது. அதைப்
போல மரண தண்டனையை எதிர்நோக்கி
இருந்த வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், மீசை மாதவன்,
ஞானப்பிரகாசம் ஆகிய நான்கு பேரின்
மரண தண்டனை இரத்து செய்யப்படுவதற்கும்
பொதுச்செயலாளர் வைகோ பேருதவி புரிந்தது
குறிப்பிடத்தக்கது ஆகும்.
.
சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதுடன், 23 ஆண்டுகளாக
வேலூர் சிறையில் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளன்,
சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு
பேரையும் மத்திய அரசு விடுதலை
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
13
.
தமிழ் ஈழ விடுதலைக்குப் போராடிய
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய
அரசு விதித்த தடையை நீக்கக்கோரி
2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
கழகப் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர்
நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
செய்தார். 2010 ஆம் ஆண்டில் நீதியரசர்
விக்ரம்ஜித் சென் தலைமையில் அமைக்கப்பட்ட
தீர்ப்பு ஆயத்தில் நடந்த விசாரணையில், புலிகள்
மீதான தடையை இந்திய அரசு
நீக்கக் கோரி, வாதங்களை முன்
வைத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான
தடையை நீடித்தது சரிதான் என்று தீர்ப்பு
ஆயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து
செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்துதடன், தாமே நேரில் சென்று
வாதாடினார்.
.
நீதியரசர்
எலிபி தர்மாராவ் அவர்கள் அமர்வில் விசாரணை
நடைபெற்று வாதங்கள் முடிவுற்று தீர்ப்பு நிலுவையில் இருந்த நிலையில், டெல்லி
உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்டு
இருந்த தீர்ப்பு ஆயத்தில் 2012, நவம்பர் 3 ஆம் தேதி இறுதி
கட்ட விசாரணையில் புலிகள் மீதான தடையை
நீக்கக் கோரி வாதாடினார்.
.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்
குறிக்கோளான தமிழ் ஈழம் என்பது
தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் என்ற காரணத்தினால் புலிகள்
இயக்கம் தடை செய்யப்பட்டதாக மத்திய
அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டபோது, விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழ்
ஈழ நாட்டின் வரைபடம் மற்றும் தலைவர்
பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளை
மேற்கோள்காட்டி மத்திய அரசின்
குற்றச்சாட்டு பொய்யானது என்பதை வைகோ ஆணித்தரமாக
வாதாடினார். விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலோ,
இந்தியாவிலோ ஒர் அங்குல நிலத்தைக்கூட
இணைக்க முயற்சிக்கவில்லை. அவர்கள் இலங்கையில் உள்ள
வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் மட்டுமே
தமிழ் ஈழம் என்கிறார்கள். பெரும்பான்மைத்
தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் அவை. இலங்கையின் மற்ற
பகுதிகளைக்கூட அவர்கள் கைப்பற்ற நினைக்கவில்லை
என்றும் எடுத்துரைத்தார்.
.
2009 இல்
நடைபெற்ற முள்ளி வாய்க்கால் இறுதி
யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டுவிட்டது
என்று இலங்கை அரசு கூறி
வருவதை இந்திய அரசு ஏற்றுக்
கொண்டிருக்கும் போது, புலிகள் மீதான
தடையை இன்னும் தொடருவது ஏன்?
தமிழ் ஈழ விடுதுலைப் புலிகள்
இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம்
விதித்த தண்டனையை எதிர்த்து லக்சம்பர்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய
நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல்
பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத்
தொடுத்தது.
.
இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்
கோப் வாதாடினார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் இந்த
வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று
வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் தங்கள்
தாயகத்தின் விடுதலைக்காவும், ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல்
நிர்ணய உரிமையை நிலை நாட்டவும்
போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம்
அல்ல என்று விக்கிபீடியா தகவல்களை
மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன
ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின்
மீது தடை விதிப்பது நியாயம்
அற்றது என்றும் புலிகள் இயக்கத்தின்
சார்பில் முன் வைக்கப்பட்டன. இந்த
வழக்கில்2014 அக்டோபர் 15 ஆம் தேதி ஐரோப்பிய
ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கதின் மீதான
தடையை நீக்கி தீர்ப்பு வழங்கியது.
.
இதற்கு
முன்பு, 2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ்
நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது
விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகத் தீர்ப்பு
அளித்தது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட
நீதிமன்றம் 2011, அக்டோபர் 21 இல் விடுதலைப் புலிகள்
இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என்று
தீர்ப்பு வழங்கியது.
.
எனவே, இந்திய அரசும் புலிகள்
இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து
அதன் மீதான தடையை நீக்க
வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்:
14
.
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு சுதந்திரத்
தமிழ் ஈழம் அமைவதுதான் நிரந்தரமான
தீர்வு ஆகும் என்று மறுமலர்ச்சி
தி.மு.கழகத்தின் முதல்
மாநில மாநாடு 1995 இல் திருச்சியில் நடந்தபோது
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழ்
இனப் படுகொலைகளும் தமிழர்களின் பூர்வ தாயகப் பகுதிகளான
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தற்போது
நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றங்கள்,
இராணுவ முகாம்களின் ஆக்கிரமிப்பு போன்றவை தனித் தமிழ்
இழ நாட்டுக்கான காரணங்களை அதிகரித்துள்ளன.
.
முப்பது
ஆண்டுகளாகத் தமிழ் ஈழத் தாயகத்திற்காகப்
போராடிய மாவீரர் திலகம் தலைவர்
பிரபாகரன் அவர்களின்
இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ஜூன் 1, 2011ஆம்
ஆண்டு பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில்
நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும்,
இடதுசாரி பசுமைக் கட்சிகளும் தமிழ்
ஈழ மக்களவைகளின் அனைத்துலகச் செயலகமும் இணைந்து நடத்திய ஈழத்
தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை
குறித்த கருத்தரங்கில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ
அவர்கள் உறுதியான கருத்தை எடுத்து வைத்தார்.
.
“இலங்கையில்
தமிழ் ஈழம் அமைவதற்கு பன்னாட்டுப்
பார்வையாளர்கள் முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த
வேண்டும்; அதில் புலம் பெயர்ந்த
தமிழர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளிலேயே வாக்கெடுப்பில்
பங்கேற்க ஆவண செய்ய வேண்டும்”
என்று வலியுறுத்தினார். ஈழத் தமிழர் பிரச்சினைக்கு
‘சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே
தீர்வு’ என்பதை வலியுறுத்தி அதற்கான
பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உலகில் முதன்
முதலில் குரல் கொடுத்த பெருமை
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்குத்தான் உண்டு.
.
1976 ஆம்
ஆண்டு மே 14 ஆம் தேதி
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி,
வட்டுக்கோட்டையில் நடத்திய மாநாட்டில், ‘சுதந்திரத்
தமிழ் ஈழத்தை உருவாக்குவது’ என்று
ஈழத்துத் தந்தை செல்வா, பிரகடனம்
செய்தது ஈழத்தமிழர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பிரஸ்ஸல்சில் தமிழ்
ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனறு வைகோ அவர்கள்
முன்மொழிந்த கருத்து உலகத் தமிழர்களால்
வரவேற்கப் படுவதுடன், சரித்திரப் புகழ் பெற்றுள்ளது. தலைவர்
வைகோ முன்வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பு இலங்கையில்
உள்ள வடக்கு - கிழக்கு மாகாணத்தில்
வாழும் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடமும், தமிழ்நாட்டில்
வசிக்கும் ஈழத் தமிழர்களிடமும் நடத்தப்படுவதற்கு
ஐ.நா. மன்றம்
ஏற்பாடு செய்திட வேண்டும் என்று
மாநாடு கேட்டுக் கொள்கிறது.
.
தீர்மானம்:
15
.
இலங்கைத்
தீவில் ஈழத் தமிழ் இனத்தைப்
படுகொலை செய்த ராஜபக்சே தலைமையிலான
சிங்களப் பேரினவாத அரசின் இனப்படுகொலைக் குற்றத்தை
அனைத்துலக நாடுகளின் சுதந்திரமான விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும்
என்று 2014 மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில்
அமெரிக்கா அரசு கொண்டு வந்த
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த விசாரணைக்
குழுவை இலங்கைத் தீவுக்குள் இராஜபக்சே அரசு அனுமதிக்கவே இல்லை.
இந்த ஆண்டு மார்ச் மாதம்
நடைபெற வேண்டிய மனித உரிமைக்
கவுன்சில் கூட்டத்தில் தாக்கலாக இருந்த பன்னாட்டுக் குழு
அறிக்கையை, இலங்கை
அரசுக்கு உதவுவதற்காக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள்
செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கக் காரணமாயின.
இந்நிலையில், அமெரிக்க அரசின் வெளி விவகாரத்துறை
துணைச் செயலாளர் நிஷி தேசாய் பிஸ்வால்
எனும் இந்திய வம்சாவளி அமெரிக்கப்
பெண்மணி, ‘பன்னாட்டு விசாரணை தேவை இல்லை;
இலங்கை அரசே போர்க்குற்றங்களை விசாரிக்க
ஏற்பாடு செய்யப்படும்’ என்று அண்மையில் கொழும்புக்குச்
சென்று கருத்துக் கூறி உள்ளார். சிங்களக்
கொலைகார அரசின் ஆலோசனையின்படிதான் ஜெனீவா
மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தைத்
தாக்கல் செய்வோம் என்றும் கூறி விட்டார்.
.
ஈழத் தமிழ் இனக் கொலையாளியான
சிங்கள அரசாங்கத்தையே இதுபற்றி விசாரணை நடத்தும் தீர்ப்பாளியாகவும்
ஆக்குவதற்கு முற்பட்டுள்ள அமெரிக்க அரசுக்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
.
இலங்கையில்
ஈழத் தமிழர்கள் இனப்பிரச்சினை தீவிரமாகி தமிழர்கள் கொல்லப்பட்டபோது, 1980 களில் அமெரிக்காவில் உள்ள
மசா சூசெட்ஸ் மாநிலத்தின் நாடாளுமன்றம், “தமிழ் ஈழம் அமைவது
ஒன்றே ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்குத்
தீர்வு” என்று வரலாற்றுப் புகழ்பெற்ற
தீர்மானம் நிறைவேற்றியது.
.
இந்நிலையில்,
அமெரிக்கா தற்போது ஈழத் தமிழர்களுக்கு
எதிராகக் கொண்டுள்ள நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தமிழர்களுக்கு நீதி
கிடைக்கவும், தமிழ் இனப்படுகொலை செய்த
சிங்கள ராஜபக்சே கூட்டத்திற்கு உரிய தண்டனை கிடைக்கவும்
கழகப் பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் உள்ள
அமெரிக்க அரசின் துணைத் தூதர்
மூலம் அனுப்பி உள்ள கோரிக்கை
மனுவை அமெரிக்க அரசு பரிசீலனை செய்து
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
.
தீர்மானம்:
16
.
தமிழ்நாட்டில்
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க கழகப்
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்கள்
மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகின்றார். தூத்துக்குடி
மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட்
நச்சு ஆலையை அகற்ற உச்ச
நீதிமன்றம் வரை சென்று கழகப்
பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.
.
தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரத்தில் மத்திய
அரசு நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது சுற்றுச்
சூழலுக்கு ஆபத்து மட்டும் அன்றி
மக்களின் வாழ்வாதரம் பறிபோகும் என்பதால் அத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளையில் கழகப் பொதுச்செயலாளர் தொடர்ந்த
பொதுநல வழக்கில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க உயர்நீதிமன்றம்
தடை விதித்துள்ளது.
.
தூத்துக்குடி
மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
திருவைகுண்டம் அணை 145 ஆண்டுகளாகத் தூர்
வாரப்படாமல் புதர் மண்டியதால் முழு
கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க
முடியவில்லை. இதனால் விவசாயிகள், வேளாண்மைக்கு
உரிய தண்ணீர் கிடைக்காமல் துயரம்
அடைந்தனர். இந்தப் பிரச்சினையை தூத்துக்குடி
மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஜோயல் பசுமை தீர்ப்பு
ஆயத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று மனுத்தாக்கல்
செய்தார்.
.
சென்னை
பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நடந்த இந்த வழக்கில்
ஜோயல் சார்பில் ஆஜரான கழகப் பொதுச்செயலாளர்
வைகோ, திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவதற்கு
உத்தரவிடக் கோரி வாதங்களை முன்வைத்தார்.
தற்போது பசுமைத் தீர்ப்பு ஆயம்
அளித்த உத்தரவால் தமிழக அரசு திருவைகுண்டம்
அணையில் தூர் வார நடவடிக்கை
எடுத்துள்ளது.
.
தஞ்சை,
திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி
டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் மீத்தேன்
எடுக்கும் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களிடையே
விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தது மட்டும் அல்லாமல்,
பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் இது குறித்த வழக்கு
விசாரணைக்கு வந்தபோது, மாண்பமை நீதிபதிகள் இந்த
வழக்கில் தீர்ப்பு ஆயத்திற்கு ஆலோசனை வழங்குமாறு வைகோவைக்
கேட்டுக் கொண்டனர்.
.
தற்போது
ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஷேல்
எரிவாயு எடுக்கத் திட்டமிட்டு இருப்பதையும் பொதுச்செயலாளர் வைகோ பசுமைத் தீர்ப்பு
ஆயத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து, இந்த
வழக்கிலும் தீர்ப்பு ஆயத்திற்கு ஆலோசனை கூறி வருவது
வரவேற்கத்தக்கது ஆகும்.
.
தமிழகம்
முழுவதும் நீர்நிலைகள், ஏரிகள், குளங்களில் கருவேல
மரங்கள் வளர்ந்து தண்ணீர் தேக்க முடியாத
நிலை ஏற்பட்டுள்ளதை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல
வழக்குத் தொடுத்து அவற்றை அகற்ற தமிழக
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல்
செய்துள்ளார்.
.
தமிழ் நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் தொடர்ந்து
போராட்டக் களத்திலும், நீதிமன்றங்களிலும் அயராது கழகப் பொதுச்செயலாளர்
வைகோ போராடி வருவதால், மக்கள்
மன்றம் மறுமலர்ச்சி தி.மு.க.வை வாழ்த்தி வரவேற்கிறது.
இதற்காகக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ
அவர்களுக்கு இம்மாநாடு பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கிறது.
.
தீர்மானம்:
17
.
இந்திய
விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்திய
தேசிய இராணுவத்தைக் கட்டி அமைத்து ஆயுதம்
ஏந்திப் போரிட்ட மாவீரர் நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ் இந்திய நாட்டு மக்கள்
மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
நேதாஜியின் படை அணிவகுப்பில் தமிழர்கள்தான்
களத்தில் நின்று போராடி உயிர்த்தியாகம்
செய்தனர். வீரமிகு தலைவர் நேதாஜி,
1945 ஆகஸ்ட் 18 ஆம் நாள் தைகோகூ
விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில்
மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.
.
ஆனால்,
தைவான் அரசு அப்படி ஒரு
விபத்து நடக்கவில்லை என்று அப்போது அறிவித்தது.
.
நேதாஜி
பற்றிய உண்மை விபரங்களை வெளியிட
வேண்டும் என்று நாட்டு மக்கள்
வைத்த கோரிக்கையை மத்திய காங்கிரஸ் அரசு
நேரு காலத்திலிருந்தே கண்டுகொள்ளவில்லை. நேதாஜி குறித்து மறைக்கப்பட்ட
உண்மை ஆவணங்களை வெளியிடக்கோரி கழகத்தின் சார்பில் சென்னையில் 2014 டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின்
பிரதிநிதியாக முனைவர் பார்த்தா சட்டர்ஜி
பங்கேற்றார்.
.
இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் 2015 மார்ச் 23 ஆம் நாள் கழகம்
நடத்திய கருத்தரங்கில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின்
தலைவர் சரத் யாதவ், டில்லி
உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர்
சச்சார், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி,
பேராசிரியர் சைனி, தேவி பிரசாத்
புருஷ்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேதாஜி குறித்த உண்மைகளை
வெளியிடக்கோரி நாட்டிலேயே முதன் முதலில் போராட்டம்
நடத்தி குரல் கொடுத்தது நமது
கழகம்தான்.
.
தற்போது
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும்
செப்டம்பர் 18 ஆம் தேதி மாநில
உள்துறை வசம் உள்ள நேதாஜி
பற்றி 64 ரகசிய ஆவணங்களை வெளியிடப்
போவதாக அறிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் அறிவிப்பை
கழகத்தின் இம்மாநாடு பாராட்டி வரவேற்பதுடன், மத்திய அரசும் நேதாஜி
பற்றிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறது.
.
தீர்மானம்
எண்: 18
.
அமராவதி
அணையின் முக்கிய நீர்பிடிப்புப் பகுதியான
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட, கேரள
அரசு 3.11.21 அன்று அடிக்கல் நாட்டி,
பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து, கழகத்தின்
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 15.11.2014 அன்று,
அமராவதி அணை முதல் சின்னதாராபுரம்
வரை விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தினார். தமிழக அரசு விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டுமென
வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னர், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்
28.11.2014 இல் அணை கட்ட தடை
விதிக்கக் கோரி மனுத் தாக்கல்
செய்தது. ஆனால், கேரள அரசு
தொடர்ந்து அணை கட்டும் பணியைச்
செய்து வருகிறது.
.
காவிரி
நடுவர் மன்றம் 5.02.2007 இல் வழங்கிய தீர்ப்பில்
அமராவதி நீர்த்தேக்கத்தில் இருந்து 3 டி.எம்.சி.
தண்ணீர் கேரளத்திற்கு வழங்க வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது. ஆனால் அமராவதி அணையின்
கொள்ளளவு 4 டி.எம்.சி.
மட்டுமே. அதில் மூன்று டி.எம்.சி. நீரைக்
கேரளத்திற்கு வழங்கினால், அமராவதி அணையின் மூலம்
தமிழகத்தில் பாசனம் பெறும் 60 ஆயிரம்
ஏக்கர் நிலங்கள் மற்றும் 26 குடிநீர்த்திட்டங்கள் பெரும் பாதிப்பு அடையும்.
.
தமிழக அரசு காவிரி நடுவர்
மன்றத் தீர்ப்பின் சில பகுதிகளை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக
எதுவும் குறிப்பிடவில்லை. எனவே அந்த வழக்கில்,
தமிழக அரசு ஒரு இடைக்கால
மனுவைத் தாக்கல் செய்து, கேரள
அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதை நிரந்தரமாகத்
தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்
எண்: 19
.
இந்தியாவில்
விவசாயத்திற்கு அடுத்த இடத்தை நெசவுத்
தொழில் வகிக்கின்றது. இந்தியா முழுமையும் 20 இலட்சம்
விசைத்தறிகள் உள்ளன. 8 இலட்சம் விசைத்தறிகளுடன் மராட்டிய
மாநிலம் முதல் இடமும், 5 இலட்சம்
விசைத்தறிகளுடன் தமிழகம் இரண்டாம் இடமும்
வகிக்கின்றன. திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும்
2 இலட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. 1996, 2008 ஆண்டுகளில் ஏற்பட்டது போல், விசைத்தறித் தொழில்
தற்போது பலத்த நெருக்கடியில் உள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து விசைத்தறித் தொழிலை
மீட்பதற்கு கீழ்காணும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென மத்திய மாநில அரசுகளை
இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
.
ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி
உரிமையாளர்களுக்கும் இடையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கூலி
ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் ஏற்பட்ட உடன்படிக்கையை
ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது இல்லை. இதனால் தொழில்
நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எனவே, ஒப்பந்தக் கூலி
அமுல்படுத்துவதைச் சட்டமாக்க வேண்டும்;
.
சிறு மற்றும் குறு விசைத்தறி
உரிமையாளர்களுக்குத் தற்போது அரசாங்கம் வழங்கி வருகின்ற 500 யூனிட்
வரையிலான கட்டணம் இல்லா
மின்சாரத்தை 1000 யூனிட்கள் வரை உயர்த்தித் தர
வேண்டும். மேலும்
இச்சலுகை 10 எச்பி உள்ளவர்களுக்கு மட்டுமே
என்ற நிலையை மாற்றி 15 எச்பி
வரை உயர்த்தித் தர வேண்டும்;
.
பல்வேறு
காலகட்டங்களில் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில்
மத்திய அரசு சாதாரண விசைத்தறிகளை
செமி ஆட்டோமேட்டிக் தறிகளாகத் தரம் உயர்த்துவதற்கு 50 விழுக்காடு
மானியத்தில் ஒரு தறிக்கு 15000 ரூபாய்
மானியம் வழங்குகிறது. அதற்கு உண்டான நிதியை
மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் இருந்து விரைந்து விடுவித்து,
அனைத்து விசைத்தறி உரிமையாளர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க
வேண்டும்;
.
சிறு மற்றும் குறு விசைத்தறி
உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய
ஒளி மூலம் உற்பத்தி செய்து
கொள்ள 100 விழுக்காடு மானியத்தில் தேவையான உதிரி பாகங்களை
வழங்கிட வேண்டும். மேலும், உற்பத்தி செய்யும்
மின்சாரத்திற்கு யூனிட் அடிப்படையில்
மானியம் வழங்க வேண்டும்;
.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்
உற்பத்தியாகக் கூடிய பல லட்சம்
மீட்டர் காடா துணியை இடைத்தரகர்கள்
இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதற்கு/ பல்லடத்தை
மையமாக வைத்து முழுமையான உள்கட்டமைப்பு
வசதிகளுடன் கூடிய ஜவுளிச் சந்தை
அமைக்க வேண்டும்;
.
விசைத்தறிகளுக்குப்
பயன்படுத்தக்கூடிய நூல் மற்றும் பஞ்சுக்கு
விதிக்கப்படும் 5 விழுக்காடு
விற்பனை வரியை 2 விழுக்காடாகக் குறைக்க
வேண்டும்;
.
விசைத்தறித்
தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு மானியத்தில் வீட்டு வசதி
செய்து கொடுக்க வேண்டும்;
.
வங்கியில்
கடன் பெற்றுத் தொழில் நடத்தி வருகின்ற
விசைத்தறி உரிமையாளர்களுக்கு நடைமுறையில் உள்ள 90 நாட்களில் என்
பி ஏ என்ற நிலைமையை
மாற்றி, மூலப்பொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால்
தொழில் பாதிக்கப்படுவதால், கூலி அடிப்படையில் தொழில்
செய்யும் விசைத்தறியாளர்களுக்கு 180 நாட்களாக மாற்றி அமைக்க வேண்டும்;
.
காடா துணி ஏற்றுமதிக்கு மத்திய
அரசு வழங்கி வந்த 4 விழுக்காடு ஏற்றுமதி மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்;
.
அயல்நாட்டுத்
தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை உள்நாட்டு சிறு மற்றும்குறு தொழில்
முனைவோர்களுக்கும் வழங்க வேண்டும்;
.
சைமா அமைப்பின் மூலமாக மத்திய மாநில அரசுகளின்
ஒப்புதலோடு கடலூரில் அமையவிருக்கும் சாயம் ஏற்றும் தொழில்
பூங்காவை போர்க்கால அடிப்படையில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில்
விரைந்து அமைத்து செயல்பாட்டுக்குக் கொண்டு
வர மத்திய மாநில அரசுகள்நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
.
மேற்கண்ட கோரிக்கைகளை
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் நிறைவேற்றி, விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க வழிவகை செய்திட வேண்டும்
என மத்திய மாநில அரசுகளை
இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்
எண்: 20
.
கூடங்குளம்
அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள்
மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுக
.
தென்தமிழ்நாட்டுக்கு
அழிவாக அமையும் கூடங்குளம் அணு
உலையை எதிர்த்து இடிந்தகரையில் மீனவ மக்களும் மற்றவர்களும்
இந்தியாவில் இதுவரை நடைபெற்று இராத
வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக
நடத்தினர். அந்த அறப்போரை ஒடுக்குவதற்காக
கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் மணி,
சுப. உதயகுமார், முகிலன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள்
மீது அண்ணா தி.மு.க. அரசு பொய்வழக்குகளைப்
போட்டது. அவற்றைத் திரும்பப் பெறுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியபிறகும், எண்ணற்ற வழக்குகள் இன்னமும்
திரும்பப் பெறப்படவிலலை.
.
தென் தமிழ்நாட்டைக் காக்கப் போராடியவர்கள் மீது
போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற
வேண்டும் என்றும் கூடங்குளத்தில் 3,4 ஆவது
அணு உலைகளை அமைக்கும் திட்டத்தை
மத்திய அரசு கைவிட வேண்டும்
என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்ட உலைகளை
அகற்ற வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்
எண் 21
.
ஆனைமலை
ஆறு, நல்லாறு அணைத் திட்டங்கள்
.
தமிழ்நாடு-
கேரளா அரசுகளுக்கு இடையே 1989 ஆம் ஆண்டு போடப்பட்ட
பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் மூலம்,
எல்லா அம்சங்களும் நிறைவு செய்யப்பட்டால், தமிழ்நாட்டுக்கு
30.5 டி.எம்.சி. நீரும்,
கேரளத்திற்கு 19.55 டி.எம்.சி. நீரும்
ஆண்டுதோறும் கிடைக்கும் எனக் கணக்கிட்டு ஒப்பந்தம்
செய்யப்பட்டது. ஆனால், இயற்கையாக மழைப்பொழிவு
குறைந்துவிட்டபடியால், கடந்த 35 ஆண்டுகளாக, கேரளத்திற்கு 19.55 டி.எம்.சி. நீர்
கொடுத்தது போக, தமிழகத்திற்கு 19 டி.எம்.சி. தண்ணீர்தான்
கிடைத்து வருகின்றது.
.
இந்த மாபெரும் திட்டத்தில் மேல் நீராறு சிற்றணை,
கீழ் நீராறு சிற்றணை, சோலையாறு
அணை, பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு அணை,
பெருவாரிப்பள்ளம் அணை, மின் உற்பத்திக்கு
மேல் ஆழியாறு அணை, பாசனத்திற்கு
ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை
ஆகிய 9 அணைகள் உள்ளன. நான்கு
மின் உற்பத்தி நிலையங்களும் உள்ளன. இத்திட்டத்தில் 4.31 இலட்சம்
ஏக்கர் பாசனம் பெற வேண்டியுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆயக்கட்டுப் பகுதிகள்
நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
அதிகபட்சமாக 30 முதல் 35 நாட்களுக்கு சுழற்சி முறையில் ஒரு
மடை ஓட விட்டு ஒரு
மடை பாசன முறையில் நீர்
வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் அணைத் தண்ணீரை நம்பி
எந்தவித விவசாயத்தையும் செய்ய
முடியாத நிலையிலும், தென்னை மரங்களைக் காப்பாற்ற
முடியாத நிலையிலும் விவசாயிகள் தவிக்கின்றார்கள்.
.
ஒப்பந்தப்படி
கேரள அரசு இடைமலை ஆறு
திட்டத்தை நிறைவேற்றிய பின்னர், தமிழக அரசு ஆனைமலை
மற்றும் நல்லாற்றில்
அணை கட்டி 2.5 டி.எம்.சி.தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கேரள அரசு
இடைமலை ஆறு திட்டத்தை நிறைவேற்றி
பல ஆண்டுகள்ஆகிவிட்ட நிலையிலும் தமிழக அரசு ஆனைமலை
ஆறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற
கேரள அரசு அனுமதி மறுத்து
வருகிறது.
.
இதுகுறித்து,
மறுமலர்ச்சி தி.மு.கழகப்
பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்ற
குழுவினர், 2004 ஆம் ஆண்டு கேரள
முதல் அமைச்சர் உம்மன் சாண்டியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
.
எனவே, தமிழக அரசு கேரள
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு
நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுத்திட
வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்
கொள்கின்றது.
.
தீர்மானம் எண்:
22
.
இந்தியாவில்
உள்ள நூற்பு ஆலைகளுள் 25 விழுக்காடு
தமிழகத்தில் உள்ளது. மத்திய அரசின்
ஜவுளிக் கொள்கை காரணமாக, நூற்பு
ஆலைகள் நலிவு அடைந்து வருகின்றன.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றார்கள்.
எனவே நூற்பு ஆலைகள் கடுமையான
நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன. எனவே,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின்
மூலம் குறைந்த வட்டியில் கடன்
உதவி மற்றும் மின் கட்டணத்தில்
மானிய உதவி மற்றும் தடையில்லா
மின்சாரம் வழங்கி நூற்பு ஆலைத்
தொழிலுக்குப் புத்துயிர் அளித்திட வேண்டும் என மத்திய - மாநில
அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
.
தீர்மானம்
எண்: 23
.
1995 ஆம்
ஆண்டு குறைந்த ஓய்ñதியச்
சட்டத்தின்படி, 2014 ஆம் ஆண்டில் குறைந்த
ஓய்ñதியம் 1000 ரூபாய் என மத்திய
அரசு அறிவித்தது. ஆனால், அந்தத் தொகை
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவில்லை. தன் விருப்ப ஓய்வுபெற்ற
தொழிலாளர்கள் கடன் வாங்கியதாகவும், இன்சூரன்ஸ்
கட்டுவதாகவும் பிடித்தம் செய்து, ரூ 600 அல்லது
ரூ 700 மட்டுமே ஓய்ñதியமாக
வழங்குகிறார்கள்.
.
வயதான காலத்தில் இந்தத் தொகையை நம்பித்தான்
தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, விலைவாசியைக் கருத்தில்
கொண்டு, குறைந்தபட்ச ஓய்ñதியத்தை 3000 ரூபாயாகவும்,
அதிகபட்சமாக 6000 ரூபாயும் வழங்கிட வேண்டும்
என மத்திய அரசை இம்மாநாடு
வலியுறுத்துகிறது.
.
தீர்மானம்
எண்: 24
.
திருப்பூர்
மாவட்டத்தில் பனியன் சார்ந்த தொழில்களில்
பல இலட்சம் ஆண்-பெண்
தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல்
ஏற்றுமதி செய்வதால், அந்நியச் செலாவணி பெருமளவில் கிடைத்து
வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
திருப்பூருக்கு வந்து பணி ஆற்றுகின்ற
தொழிலாளர்கள், அடிப்படைச் சுகாதார வசதி அற்ற
குறைந்த பரப்புள்ள குடியிருப்புகளில், அதிக வாடகை கொடுத்து
வசிக்கின்றார்கள்.
.
அத்தகைய
தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்
என்றும் ; 2005 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி
தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்திரசேகர் ராவ் அவர்கள் அறிவித்தபடி
100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டித்தர
வேண்டும் என்றும் மத்திய-மாநில
அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.
மதிமுக
இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment