செப்டம்பர் 15 ஆம் நாள் நடைபெற இருக்கின்ற மதிமுக மாநாட்டிற்கு, திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஏந்தி தொடர் ஓட்ட ஏற்ப்பாட்டை மதிமுகவின் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் செய்திருக்கிறது. இந்த சுடர் ஓட்டமானது, வருகிற 12 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி கீழபழவூர் சின்னசாமி விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் காலை 9 மணி அளவில் புறப்பட்டு, மாநாடு நடைபெறும் தேதியான செப்டம்பர் 15 ல் திருப்பூர் பல்லடம் மாநாட்டு திடலில் காலை 10 மணி அளவில் தலைவர் வைகோ அவர்களிடத்தில் கையளிக்கப்படும்.
ஈரோட்டு சிங்கம், கழகத்தின் ஆட்சி மன்ற செயலாளர், தியாகவேங்கை கணேஷ மூர்த்தி அவர்கள் சுடர் ஓட்டத்தினை தொடங்கி வைக்கிறார்கள்.
இந்த சுடர் ஓட்டம் நெடுகிலும் வாகன பிரச்சாரங்கள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். திராவிட இயக்க சாதனை துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு கையளிக்கப்படும். இந்த சுடர் ஓட்ட ஒருங்கிணைப்பை மாணவர்களின் எழுச்சி நாயகன், சட்டதுறை வல்லுநராகும் அன்பிற்குரிய இளவல் பா.சசிகுமர் அவர்கள் தன் சகாக்களுடன் சேர்ந்து செய்துள்ளார்.
எனவே கழக கண்மணிகள் இந்த சுடர் ஓட்டத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு தந்து மாணவ செல்வங்களை ஊக்கப்படுத்துமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment