மக்கள் நலக் கூட்டணியின் மழை வெள்ள சேத நிவாரணம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணி சார்பில் மக்கள் தலைவர் வைகோ தலைமையில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று 31-12-2015 காலை 11 மணி அளவில் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான, ஒருங்கிணைப்பாளர் வைகோ, தொல் திருமாவளவன், முத்தரசன், மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் பிரதிநிதி வெங்கட்ராமன் ஆகியோரும், கூட்டணி கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பெருமழை வருமென்று வானிலை மையம் எச்சரித்தும், அலட்சியமாக செயல்பட்ட அதிமுக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!
குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிடு, சுகாதார பணிகளை முன்னெடு,முன்னெடு!
என்பன போன்ற ஆர்ப்பாட்ட முழக்கங்களை தொல் திருமாவளவன் முன் சொல்ல கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியது.
ஆர்ப்பாட்ட மேடையில் தலைவர்கள் வந்தார்கள், அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள், ஐயாவும், அம்மாவும் சுகமாக இருக்கிறார்கள், மக்கள்தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றார். அநியாயம், அக்கிரமத்தை முடிவு கட்டுவதற்காக மக்கள் நலக்கூட்டணி உருவாகி இருக்கிறது.
மதுரை உயர்நீதிமன்றம் ஆக்கிரமைப்பை எதிர்த்து உத்தரவிடுகிறது தான் ஆக்ரமிப்பின் மீதே இருந்து கொண்டிருக்கிறதை அறியாமல் என பேசினார் முத்தரசன். மேலும், மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை கணக்கெடுக்கிறீர்களே ஆண்ட ஆளும் கட்சிகளே, மக்கள் உங்கள் மேல் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதை முதலில் உணருங்கள் என சுளீர் என பேசினார்.
தொல் திருமாவளவன் பேசுகையில், தன் கட்சியிலேயே தான் சிறப்பாக செயல்படுகிறோம் என்று தனக்கு தானே பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது வேடிக்கையாக இருக்கிறது என அதிமுக அரசை கடிந்தார். மக்களை விலைக்கு வாங்க முடியும் என்ற இறுமாப்பிலேயே முதல்வர் இருக்கிறார். அவர் என்ன, அண்ணன் வைகோ மாதிரி சேறு சகதிகளில் இறங்கி மக்கள் கைகளை பிடித்து ஆறுதல் கூறினாரா என அரசுக்கு உச்சியில் அடித்தார் போல பேசினார் திருமாவளவன்.
ஒரு ஓட்டுக்கே 1000 ரூபாய் கொடுக்கிற அம்மா என்று சொல்லும் நீங்கள், ஏக்கருக்கே 5000 கொடுப்பதுதான் வெள்ள நிவாரணமா எனவும் கேள்வி எழுப்பினார்.
ஒரு ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்து வீட்டை கட்டுபவன்தான் உண்மையான ஆக்கிரமிப்பாளன். .வாழ்க்கைக்காக கூவம் ஓரம் இருப்பவன் அல்ல ஆக்கிரமிப்பாளன் என தெரிவித்தார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்துகையில்,
மக்கள் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டு, உணவில்லாமல், உடை இழந்து பரதேசியால் அலைந்துகொண்டிருந்த வேளையில், முதலமைச்சர் அவர்களே நீங்கள் எங்கே இருந்தீர்கள். வேறு கிரகத்திற்கு வாசம் செய்ய போயிருந்தீர்களா, மெளன நிலையில் இருந்தீர்களா என கேள்வி எழுப்பினார்.
வேண்டா வெறுப்பாக வாகனத்தில் வந்து உள்ளேயே இருந்து, வாக்களித்த மக்களின் பகுதி என்று கூட பராமல், கீழிறங்கு அந்த மண்ணில் கால் வைக்க கூட மனமில்லாமல் வாகனத்தின் உள்ளேயே இருந்துகொண்டு, தேர்தல் கனவிலே இருந்ததால் வாக்காள பெருமக்களே என்று கூறி, ஒரு கேலிக்குரிய பொருளாகவே உங்களை ஆக்கிக்கொண்டு போனீர்கள். பால்கார்ர் பால் போடுகிற வேகம் மாதிரி ஓட்டுக்கு 1000 வீதம் ஒவ்வொரு வீட்டிற்கும் வேகமாக கொடுத்தீர்களே, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு இந்த அரசாங்கத்திலே, துன்பத்தில் தவிக்கிற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடிந்த்தா எனவும் கேள்வி எழுப்பினார் வைகோ.
எனவே மக்களே, இதற்கு பிறகு அமையப்போகும் அரசு, கூட்டணி அரசு. தமிழக இதுவரை கண்டிராத காட்சி நடைபெற இருக்கிறது. நாட்டு மக்களே நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். கூட்டணியின் நான்கு கட்சிகளின் தலைவர்கள் கரைபடியாத கரங்களை கொண்டவர்கள். நாங்கள் காசற்றவர்கள், மாசற்றவர்கள், கொள்கையாளர்கள், அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் நாங்கள் ஒன்றாக இனைந்திருக்கிறோம் என கூட்டணி ஒற்றுமையை எடுத்து கூறினார். தடுப்புகளும், கடிவாளங்களும் கொண்டதுதான் கூட்டணி அரசு.
சமூக வலைதளத்தில் இயங்கும் தம்பிமார்களுக்கு சொல்லுகிறேன். உங்கள் வந்து உதவினீர்கள். உங்களில் ஈரம் இருக்கிறது என்பதை நீங்கள் எடுத்துக்காட்டியுள்ளீர்கள். எனவே எங்களுக்கு நீங்கள்தான் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுக்க முடியும் என இணையத்தில் இயங்குகின்றவர்களிடம் வைகோ வேண்டுகோள் வைத்தார்.
தாய்மார்கள் கண்ணீருடன் கதறுகிறார்களே அந்த மதுக்கடையை அகற்ற மக்கள் நலக் கூட்டணியை தவிர யாருக்கும் அந்த தகுதி கிடையாது. ஜெயலலிதாவை கொலைகார அரசு என்று குற்றம் சாட்டியவர்கள் நாங்கள். சசிபெருமாளை கொன்றவர்கள் நீங்கள் அதிமுக அரசு. ஆனால் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகிற இயக்கம்தான் மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற அமைப்பாக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி என்றார்.
ஒவ்வொரு சிறுத்தையும், செங்கொடி தோழர்களும், கழகத்தின் கண்மணிகளும் ஆயிரம் பேர்களுக்கு சம்ம் என்றெண்ணி நாம் களத்துக்கு செல்வோம். ஜனவரி 26 ல் மதுரைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்து நிறைவு செய்தார் வைகோ.
செய்தி: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்.